ADDED : ஜூன் 12, 2025 10:36 PM

விழுப்புரம்,; தமிழக அரசின் சார்பில் விழுப்புரம் மாவட்ட வன அலுவலருக்கு, சிறப்பு விருது வழங்கப்பட்டது.
சென்னை வர்த்தக மையத்தில், வனத்துறை சார்பில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடந்தது. இதில், சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில், மனித - வனவிலங்குகள் முரண்பாடு மேலாண்மை, பசுமை தமிழ்நாடு இயக்கம், நீடித்த நிலைத்த வன மேலாண்மை பிரிவுகளில் சிறப்பாக பணியாற்றியமைக்காக, விழுப்புரம் மாவட்ட கார்த்திகேயனிக்கு சிறந்த மாவட்ட வன பாதுகாவலர் விருதினை, முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில், விழுப்புரம் மாவட்டம், கோலியனுாரைச் சேர்ந்த சமூக சேவகர் மணிகண்டனுக்கு, தமிழக அரசின் சிறந்த நீர்நிலைப் பாதுகாவலர் விருது வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வனத்துறை தலைவர் ஸ்ரீனிவாஸ் ரெட்டி, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் ராகேஷ்குமார், தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டுத் தலைவர் ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர்.