/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/அதிகாரிகளுக்கு சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் டோஸ்! பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள அறிவுறுத்தல்அதிகாரிகளுக்கு சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் டோஸ்! பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள அறிவுறுத்தல்
அதிகாரிகளுக்கு சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் டோஸ்! பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள அறிவுறுத்தல்
அதிகாரிகளுக்கு சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் டோஸ்! பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள அறிவுறுத்தல்
அதிகாரிகளுக்கு சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர் டோஸ்! பள்ளிகளில் அடிப்படை வசதி மேற்கொள்ள அறிவுறுத்தல்
ADDED : ஜன 05, 2024 12:26 AM

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் ஆய்வு செய்த சட்டசபை மதிப்பீட்டுக் குழுவினர், அரசு பள்ளி மற்றும் அரசு அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் இல்லாததை அறிந்து அதிகாரிகளிடம் கடிந்து கொண்டனர். மேலும், வசதிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினர்.
தமிழ்நாடு சட்டசபை மதிப்பீட்டுக்குழு தலைவர் கும்பகோணம் தொகுதி எம்.எல்.ஏ., அன்பழகன் தலைமையில், உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.,க்கள் திருத்தணி சந்திரன், காட்டுமன்னார்கோவில் சிந்தனைச்செல்வன், மயிலம் சிவக்குமார், ஆரணி ராமச்சந்திரன், எக்மோர் பரந்தாமன் ஆகியோர் ஆய்வு செய்தனர். அமைச்சர் மஸ்தான், புகழேந்தி எம்.எல்.ஏ., கலெக்டர் பழனி முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் வழுதரெட்டி ஆதிதிராவிடர் மேல்நிலைப் பள்ளியில் காலை உணவை சாப்பிட்டு பார்த்து, மாணவர்களிடம் தரம் குறித்து விசாரித்தனர். அப்பள்ளியில் சுற்றுச்சுவர் அமைக்க அறிவுறுத்தினர்.
கோலியனுார் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கொட்டப்பட்டிருந்த குப்பைகளைப்பார்த்து ஆய்வுக்குழுவினர் அங்கிருந்த பி.டி.ஓ., பரந்தாமன் மற்றும் தலைமை ஆசிரியர் ரங்கநாச்சியார் ஆகியோரை கடிந்து கொண்டனர்.
வகுப்பறை முன் சுத்தமின்றி மண் குவியல் கிடந்ததால், அதனையும் அகற்ற கூறினர். ஆய்வுக்குழு வரும் என 2 நாள் முன்பே தெரிந்தும், இப்படி குப்பையை அகற்றாமல் இருப்பதா என 'டோஸ்' விட்டனர்.
வகுப்பறையில் மின் விளக்கின்றி இருட்டாக இருந்ததோடு, மாணவர்கள் தரையில் அமர்ந்திருந்ததால், ஏன் பென்ஞ், டேபிள் கூட இல்லையா என விசாரித்தனர். இங்குள்ள 1,600 மாணவர்களில் 300 பேருக்கு தான் பெஞ்ச் உள்ளது என கூறியதால், உடனே முதன்மைக் கல்வி அலுவலரை அழைத்து, ஏன் வாங்கி தரவில்லை என கேட்டு கடிந்து கொண்டனர்.
பிறகு கலெக்டரிடம், சி.எஸ்.ஆர்., நிதி வாங்கி தேவையானவற்றை செய்து கொடுக்கும்படி அறிவுறுத்தினர். மாணவர்கள் காலணிகளை வெளியே விடுவதைப் பார்த்து, கண்டித்த குழுவினர், வகுப்பறைக்குள் காலணி அணிந்து செல்லலாம். சுயமரியாதை அவசியம் என அறிவுறுத்தினர்.
இதனையடுத்து, கோலியனுார் அரசு தொடக்கப் பள்ளியில் 'நம்ம ஸ்கூல்; நம்ம ஊரு பள்ளி' திட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, இத்திட்டத்தை விரிவாக செய்திட ஆலோசனை வழங்கினர். தொடர்ந்து, பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், வகுப்பறை, கழிவறை, குடிநீர் வசதி இல்லாதால் ஆசிரியர்களை கண்டித்தனர்.
ஆய்வின்போது சட்டசபை செயலாளர் சீனிவாசன், மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், முன்னாள் எம்.எல்.ஏ., புஷ்பராஜ், டி.ஆர்.ஓ., பரமேஸ்வரி, சி.இ.ஓ., அறிவழகன் உள்ளிட்ட அலுவலர்கள் உடனிருந்தனர்.
திண்டிவனம்
திண்டிவனத்தில் புதியதாக ரூ.60 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் மாவட்ட தலைமை மருத்துவமனை பணிகளை ஆய்வு செய்தனர். அப்போது பொதுப்பணித்துறை மற்றும் ஒப்பந்தாரரிடம் பணிகள் குறித்து கேட்டறிந்தனர்.
குடிநீர் வசதிக்கான கட்டமைப்பை முன்கூட்டியே ஏற்பாடு செய்ய வேண்டும் என்று பொதுப்பணித்துறை மற்றும் மருத்துவமனை நிர்வாகத்தின் அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.
ஆய்வின் போது, சப் கலெக்டர் தமிழரசன் (பொறுப்பு), முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், நகர மன்ற தலைவர் நிர்மலா, கமிஷனர் தமிழ்ச்செல்வி, பொறியாளர் பவுல்செல்வம், நகர தி.மு.க.,செயலாளர் கண்ணன், மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் லட்சுமணன், திண்டிவனம் தலைமை மருத்துவ அதிகாரி பத்மாவதி உடனிருந்தனர்.