Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நகராட்சி ஊழியரை காலில் விழ வைத்த விவகாரம்: தி.மு.க., கவுன்சிலர்கள் மீது வன்கொடுமை வழக்கு

நகராட்சி ஊழியரை காலில் விழ வைத்த விவகாரம்: தி.மு.க., கவுன்சிலர்கள் மீது வன்கொடுமை வழக்கு

நகராட்சி ஊழியரை காலில் விழ வைத்த விவகாரம்: தி.மு.க., கவுன்சிலர்கள் மீது வன்கொடுமை வழக்கு

நகராட்சி ஊழியரை காலில் விழ வைத்த விவகாரம்: தி.மு.க., கவுன்சிலர்கள் மீது வன்கொடுமை வழக்கு

UPDATED : செப் 05, 2025 02:07 AMADDED : செப் 05, 2025 01:44 AM


Google News
Latest Tamil News
திண்டிவனம்:தி.மு.க., பெண் கவுன்சிலர் காலில் நகராட்சி ஊழியர் விழுந்து மன்னிப்பு கேட்ட விவ காரம் தொடர்பாக, தி.மு.க., நகர்மன்ற தலைவரின் கணவர் உள்ளிட்ட 9 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி யில் தி.மு.க.,வை சேர்ந்த நிர்மலா நகர்மன்ற தலை வராக உள்ளார்.

20வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் ரம்யா, கடந்த ஆக., 28ம் தேதி நகராட்சியில் இளநிலை உதவியாளர் முனியப் பனிடம், கடந்த 2023ம் ஆண்டு, கோப்புகளை எடுத்து தருமாறு கேட்டபோது வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த முனியப்பன் பெண் கவுன்சிலரை ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து கவுன்சிலர் ரம்யா, முனியப்பன் மீது புகார் கொடுப்பதற்காக, நகராட்சி கமிஷனர் ஆபீசுக்கு ஆக., 29ம் தேதி சென்றபோது, அங்கு நகர்மன்ற தலைவரின் கணவரும், 8வது வார்டு கவுன்சிலர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் இருந்துள்ளனர்.

அப்போது, பிரச்னையை முடிவிற்கு கொண்டு வரும் வகையில் முனியப்பன், தி.மு.க. பெண் கவுன்சிலர் ரம்யாவின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார்.

இது சர்ச்சையானது. இதன் தொடர்ச்சியாக, திண்டிவனம் டவுன் டி.எஸ்.பி., பிரகாஷிடம், தன்னை வலுக்கட்டாயமாக காலில் விழுந்து மன்னிப்பு கேட்க வைத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என முனியப்பன் புகார் கொடுத்தார்.

கவுன்சிலர் ரம்யாவும், டவுன் டி.எஸ்.பி.,யிடம் புகார் கொடுத்துள்ளார். அதில், 'தன் மீது புகார் அளிக்க வேண்டாம் என்று முனியப்பன் மன்னிப்பு கேட்டார். பின், திடீரென என் காலில் விழுந்து, என்னுடயை பின்புறத்தில் கையை வைத்து அருவருக்கத்தக்க வகையில் நடந்து கொண்டார். தவறான எண்ணத்தில் என்னை தொட்டு களங்கம் விளைவித்த முனியப்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், முனியப்பன் கொடுத்த புகாரின் பேரில், தி.மு.க., கவுன்சிலர் ரம்யா, அவரது கணவர் ராஜா, நகர்மன்ற தலைவரான நிர்மலாவின் கணவர் ரவிச்சந்திரன், தி.மு.க., பிரமுகர்கள் பிர்லா செல்வம், காம ராஜ் மற்றும் நகராட்சி அதிகாரிகள் 4 பேர் என மொத்தம் 9 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நேற்று முன்தினம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். ஆனால், யாரும் கைது செய்யப்படவில்லை.

தலைகுனிய வைக்கும் செயல்


திண்டிவனம் நகராட்சியில், இளநிலை உதவியாளராகப் பணியாற்றும் முனிப்பன் என்பவரை, கவுன்சிலர் ரம்யா காலில் விழவைத்துள்ள குரூரமான ஜாதிய வன்கொடுமை நடந்தேறியுள்ளது. கடந்த, 2023ம் ஆண்டு கோப்பு ஒன்றை தேடுவது தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தில், பெண் கவுன்சிலரை எதிர்த்து பேசினார் என்பது தான், அவர் செய்த குற்றமாம். அதை தன் கணவரிடம் சொல்லி, அப்பெண் வெளியாட்களை அழைத்து வந்து, முனியப்பனை மிரட்டி அச்சுறுத்தியிருக்கிறார். அத்துடன் நகரசபை தலைவரின் கணவரும், கவுன்சிலருமான ரவிச்சந்திரன் என்பவர், முனியப்பனை அப்பெண்ணிடம் மன்னிப்பு கோரும்படி கூறியுள்ளார்; அதன்படி மன்னிப்பு கேட்டுள்ளார். அப்பெண் வாயால் மன்னிப்பு கேட்டால் போதுமா என கேட்டதையடுத்து, மேலும் அச்சத்துக்கு ஆளாகியிருக்கிறார். இதையடுத்தே, அந்த அவலம் அரங்கேறி யுள்ளது. இது, தமிழினத்தை தலைகுனிய வைக்கும் வெட்கக் கேடான செயல்.
திருமாவளவன், தலைவர், வி.சி.,







      Our Apps Available On




      Dinamalar

      Follow us