/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் பள்ளியில் பாராட்டு விழா கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் பள்ளியில் பாராட்டு விழா
கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் பள்ளியில் பாராட்டு விழா
கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் பள்ளியில் பாராட்டு விழா
கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் பள்ளியில் பாராட்டு விழா
ADDED : ஜூன் 09, 2025 11:42 PM

திண்டிவனம்: கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் உயர்நிலைப் பள்ளியில், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
திண்டிவனம் அரசு நிதியுதவி பெறும் கன்னிகா பரமேஸ்வரி பெண்கள் உயர்நிலைப்பள்ளி, பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் நுாறு சதவீத தேர்ச்சி பெற்றது.
நுாறு சதவீத தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
பள்ளி தலைமையாசிரியர் சுதர்சன் வரவேற்றார். நுாறு சதவீத தேர்ச்சி கொடுத்த ஆசிரியர்களுக்கு வெள்ளி நாணயமும், முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு ரொக்க பரிசு, கேடயம் வழங்கப் பட்டது.
பள்ளிக்குழு செயலாளர் நாகராஜ் குப்தா, பள்ளிக்குழு தலைவர் நரசிம்மன், உறுப்பினர் ராஜாராம், முன்னாள் பள்ளிக்குழு செயலாளர் சஞ்சீவி குப்தா வாழ்த்தி பேசினர். ராஜேஸ்வரி நன்றி கூறினார்.