Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இந்தியன் வங்கி நிறுவனத்தில் இலவச பயற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியன் வங்கி நிறுவனத்தில் இலவச பயற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியன் வங்கி நிறுவனத்தில் இலவச பயற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

இந்தியன் வங்கி நிறுவனத்தில் இலவச பயற்சிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

ADDED : ஜூன் 29, 2025 03:19 AM


Google News
விழுப்புரம்: விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில் இலவச தொழிற்பயிற்சிக்கான விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது.

இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவன அலுவலக செய்திக்குறிப்பு;

விழுப்புரம் இந்தியன் வங்கி ஊரக சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிறுவனத்தில், ஏ.சி., ரெப்ரஜிரேட்டர் சர்வீஸ் சம்பந்தமாக இலவச தொழிற் பயிற்சி வரும் ஜூலை 7 ம் தேதி துவங்குகிறது. 30 நாட்கள் நடக்கும் இப்பயிற்சிக்கான நேர்முக தேர்வு வரும் ஜூலை 1ம் தேதி நடக்கவுள்ளது.

18 முதல் 45 வயதுள்ளவர்களும், 8 ம் வகுப்பு தேர்ச்சி, அதற்கும் மேல் படித்தவர்கள் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம். பங்கேற்போர் பெயரில் அல்லது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் நுாறு நாள் அட்டை இருந்தால் முன்னுரிமை வழங்கப்படும்.

கிராமப்புற மக்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. இதற்கு விருப்ப முள்ளோரிடம் இருந்து பயிற்சிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. பயிற்சியில் சேர ஆதார், ரேஷன் கார்டு, வாக்காளர் அட்டை, கல்வி சான்றிதழ், வங்கி கணக்கு புத்தகம், நுாறுநாள் வேலை அட்டை நகல்களை அவசியம் கொண்டு வர வேண்டும். இது பற்றி மேலும் விபரங்களை பெற 04146 294115 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us