/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல் சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல்
சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல்
சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல்
சம்பளம் தராததால் கோபம் செயல் அலுவலருக்கு மிரட்டல்
ADDED : ஜூன் 09, 2025 11:24 PM
விழுப்புரம் : வளவனுார் அருகே பேரூராட்சி செயல் அலுவலரை மிரட்டிய இருவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
விக்கிரவாண்டி அருகே வி.மாத்துார் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாதுரை,50; இவர், வளவனுார் பேரூராட்சி அலுவலகத்தில் செயல் அலுவலராக பணிபுரிகிறார். அதே அலுவலகத்தில் வளவனுாரை சேர்ந்த சாமுண்டீஸ்வரி,45; என்பவர் கடந்த 6 ஆண்டுகளாக தற்காலிக கணினி ஆப்ரேட்டராக பணிபுரிகிறார்.
கடந்த 3 மாதங்களாக சாமுண்டீஸ்வரிக்கு மாத ஊதியம் வழங்கப்படவில்லை. இதையொட்டி, சாமுணடீஸ்வரி துாண்டுதலின் பேரில், இதே பகுதியை சேர்ந்த ஞானவேல்,49; கடந்த 4ம் தேதி வளவனுார் பேரூராட்சி அலுவலகம் முன்பு, செயல் அலுவலர் அண்ணாதுரையை அரசு பணியை செய்யவிடாமல் தடுத்து மிரட்டியுள்ளார்.
வளவனுார் போலீசார் ஞானவேல், சாமுண்டீஸ்வரி ஆகியோர் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.