/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வாக்காளர்கள் அனைவரும் ராமதாஸ் பக்கம் உள்ளனர் சேலம் எம்.எல்.ஏ.,அருள் தகவல் வாக்காளர்கள் அனைவரும் ராமதாஸ் பக்கம் உள்ளனர் சேலம் எம்.எல்.ஏ.,அருள் தகவல்
வாக்காளர்கள் அனைவரும் ராமதாஸ் பக்கம் உள்ளனர் சேலம் எம்.எல்.ஏ.,அருள் தகவல்
வாக்காளர்கள் அனைவரும் ராமதாஸ் பக்கம் உள்ளனர் சேலம் எம்.எல்.ஏ.,அருள் தகவல்
வாக்காளர்கள் அனைவரும் ராமதாஸ் பக்கம் உள்ளனர் சேலம் எம்.எல்.ஏ.,அருள் தகவல்
ADDED : ஜூலை 01, 2025 02:44 AM
திண்டிவனம் : தலைவர் முதல் கிளைச் செயலாளர் வரை நிர்வாகிகளை நியமிக்க கூடிய அதிகாரம் படைத்தவர் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் என்று சேலம் எம்.எல்.ஏ., அருள் தெரிவித்தார்.
பா.ம.க., மாநில இணை பொது செயலாளரும், சேலம் எம்.எல்.ஏ., வுமானஅருள் நேற்று தைலாபுரம் தோட்டத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாசை சந்திப்பதற்காக வந்திருந்தார். முன்னதாக நிருபர்களிடம் கூறியதாவது;
பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கடந்த 45 ஆண்டு காலமாக பொறுப்பாளர்களை நியமிப்பதும், நீக்குவதையும் செய்து வருகிறார். தலைவர் முதல் கிளைச் செயலாளர் வரை பொறுப்பாளர்களை நியமிக்க கூடிய அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் ஒருவர் மட்டுமே. ஏற்கனவே பா.ம.க., தலைவர்களாக இருந்த பேராசிரியர் தீரன், ஜி.கே.மணி, தற்போதுள்ள அன்புமணி தலைவராக உள்ள இதுநாள் வரை நிர்வாகிகளை மாற்றுவதையும், நீக்குவதையும் ராமதாசிற்கு தான் முழு அதிகாரம் உள்ளது.
எங்களையும், ராமதாசையும் திட்டுவதற்காகவே சமூக ஊடக பேரவையை சேர்ந்த சிலர் உள்ளனர். வாக்காளர்கள் அனைவரும் பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் பக்கம் தான் உள்ளனர். ராமதாசுடன் இருப்பவர்கள் விசுவாசிகள் கூட்டம். இந்த விசுவாசிகள் கூட்டம் அப்படியே அன்புமணி பக்கம் தான் நிற்பார்கள்.
ஆனால் இன்றைக்கு பதவிக்காக அப்பாவை விட்டு அன்புமணி செல்வது சரியல்ல. எதிர்காலத்தில் அன்புமணி ஒரு தவறான உதாரணமாகிவிடுவார் என்று பயம் உள்ளது. கிராமத்தில் உள்ளவர்கள் பேசுகிறார்கள், பாரம்பரியம், குடும்ப சங்கிலி கட்டுப்பாடு என்பது அப்பாவிற்கு கட்டுப்பட்டவர்தான் மகன். அப்பாவிற்கு மகன் கட்டுப்படமாட்டேன் என்பது கிராமங்கள் வரை பெண்களும், ஆண்களும் பேசுகின்றனர்.
அப்பாவிற்கு மகன் கட்டுபட மாட்டேன் என்ற அன்புமணியின் போக்கு தவறான முன்னுதாரணமாகிவிடும். அதற்கு அன்புமணி ஆளாகிவிட கூடாது என அருள் எம்.எல்.ஏ., கூறினார்.