Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சி புதிய ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்

செஞ்சி புதிய ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்

செஞ்சி புதிய ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்

செஞ்சி புதிய ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கை துவக்கம்

ADDED : ஜூன் 19, 2025 04:24 AM


Google News
Latest Tamil News
செஞ்சி: செஞ்சி அரசு ஐ.டி.ஐ.,யில் மாணவர் சேர்க்கையை மஸ்தான் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.

விழுப்புரம் வந்தபோது, முதல்வர் ஸ்டாலின், செஞ்சியில் தொழில் பயிற்சி நிலையம் துவங்கப்படும் என அறிவித்தார். இதன்படி செஞ்சியில் இந்த ஆண்டு அரசு தொழில் பயிற்சி நிலையம் (ஐ.டி.ஐ.,) துவங்கப்பட்டுள்ளது. இதில் மாணவர் சேர்க்கை நேற்று முன்தினம் துவங்கியது. முதல் நாளில் 6 பேர் சேர்ந்தனர். இவர்களுக்கான கல்வி கட்டணத்தை மஸ்தான் எம்.எல்.ஏ., வழங்கி சேர்க்கையை துவக்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ., சேதுநாதன், ஒன்றிய சேர்மன் விஜயகுமார், பேரூராட்சி தலைவர் மொக்தியார் அலி, மாவட்ட கவுன்சிலர் அரங்க ஏழுமலை, தொழில் பயிற்சி நிலைய முதல்வர் சிவநடராஜன், அலுவலர் முத்துக்குமரன், இளநிலை பயிற்சியாளர் திருமலை, தி.மு.க., பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், ஒன்றிய அவை தலைவர் வாசு, மாவட்ட பிரதிநிதி அய்யாதுரை, தொண்டரணி பாஷா கலந்து கொண்டனர்.

இந்த ஆண்டு 4 பிரிவுகளில் பயிற்சி பெற 10ம் வகுப்பு மற்றும் அதற்கு மேல் தேர்ச்சி பெற்ற 120 மாணவர்களை சேர்க்க உள்ளனர்.

இவர்களுக்கு அரசு சார்பில் மாதம் ரூ.750 உதவித்தொகையும், அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்தவர்களுக்கு மேலும் ரூ.1000 வழங்க உள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us