Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடம்

அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடம்

அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடம்

அரசு மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் கூடுதல் கட்டடம்

ADDED : செப் 05, 2025 08:12 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்; அரசு தலைமை மருத்துவமனையில் ரூ.3.50 கோடியில் புதிய கூடுதல் கட்டடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.

விழுப்புரம் அரசு தலைமை மருத்துவமனையில், புதிய மருத்துவ பிரிவுகளுக்கான கூடுதல் கட்டடங்கள் கட்டித்தர வேண்டும் என்று, தொகுதி எம்.எல்.ஏ., லட்சுமணன், சட்டசபையில் கோரிக்கை வைத்தார்.

இதனை ஏற்று சிறப்பு நிதியில் ரூ.3.50 கோடி மதிப்பில், அங்கு கூடுதல் கட்டடங்கள் கட்டுவதற்கு அரசு நிதி ஒதுக்கியது.

இந்நிலையில் விழுப்புரம் அரசு மருத்துவமனை வளாகத்தில், புதிய கூடுதல் கட்டடம் கட்டுவதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.

இதில், லட்சுமணன் எம்.எல்.ஏ., பங்கேற்று அடிக்கல் நாட்டினார். தி.மு.க., மாநில ஆதிதிராவிடர் நலக்குழு இணை செயலாளர் புஷ்பராஜ், நகராட்சி ஆணையர் வசந்தி, அரசு டாக்டர்கள் லதா, உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தி.மு.க., நகர பொறுப்பாளர் வெற்றிவேல், ஒன்றிய சேர்மன் சச்சிதானந்தம், நகர துணை செயலாளர் புருஷோத்தமன், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், வார்டு செயலாளர்கள் ரவிச்சந்திரன், இசாக்அகமது, தங்கம், நகர்மன்ற கவுன்சிலர்கள் நவநீதம் மணிகண்டன், சாந்தராஜ், நகர இளைஞரணி மோகன், அவை தலைவர் வீரப்பன், லட்சுமிபதி, ரவிந்திரன், பாக்கியராஜ், விஸ்வநாதன், சாகுல், ராமச்சந்திரன், வர்த்தக அணி கதிர், ஜெயபிரகாஷ், ராஜ்கமல், ரஜனிகாந்த், தீபக், வழக்கறிஞர் அஜித்குமார், அய்யப்பன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us