/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/எஸ்.பி., அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்புஎஸ்.பி., அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு
எஸ்.பி., அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு
எஸ்.பி., அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு
எஸ்.பி., அலுவலகத்தில் உறுதி மொழி ஏற்பு
ADDED : ஜன 31, 2024 05:43 AM

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்ட காவல் அலுவலகத்தில், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.
விழுப்புரம் எஸ்.பி., தீபக்சிவாச் தலைமையில், திண்டிவனம் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்பாண்டியன் முன்னிலையில், தீண்டாமை ஒழிப்பு உறுதி மொழி ஏற்றனர்.
இந்திய அரசியலமைப்பின்பால் பற்றுள்ள நான், நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது, என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாகக்கொண்டு, எவர் மீதும் தெரிந்தோ, தெரியாமலோ சமூக வேற்றுமையை, மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்கமாட்டேன் என்று உளமாற உறுதி அளிக்கிறேன் என காவல்துறை அலுவலர்கள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் உறுதி மொழி ஏற்றனர்.