/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செஞ்சியில் 9 அரசு பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி செஞ்சியில் 9 அரசு பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி
செஞ்சியில் 9 அரசு பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி
செஞ்சியில் 9 அரசு பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி
செஞ்சியில் 9 அரசு பள்ளிகள் நுாறு சதவீத தேர்ச்சி
ADDED : மே 11, 2025 01:34 AM

செஞ்சி: செஞ்சி பகுதியில் உள்ள 9 அரசு பள்ளிகள், பிளஸ் 2 தேர்வில், நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.
செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலை பள்ளியில் தேர்வெழுதிய 416 மாணவிகளும் தேர்ச்சி பெற்றுனர். அப்பள்ளி மாணவிகள் அம்ரின்தாஜ், இலக்கியா தலா 582 மதிப்பெண் பெற்று முதலிடமும், கீர்த்தனா, பவித்ரா, சுகுணா தலா 579 மதிப்பெண் பெற்று 2வது இடமும், மாணவி சிவசங்கரி 574 மதிப்பெண்களுடன் 3ம் இடம் பிடித்துள்ளார்.
வீரணாமூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 52 மாணவர்களும், மேல் ஒலக்கூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 33 மாணவர்களும், கவரை மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 48 மாணவர்களும், சத்தியமங்கலம் பள்ளியில் தேர்வு எழுதிய 233 மாணவர்களும், மேல்சித்தாமூர் பள்ளியில் தேர்வெழுதிய 126 மாணவர்களும், மழவந்தாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 95 பேரும், நெகனூர் தேர்வெழுதிய 71 மாணவர்களும், இல்லோடு அரசு மேல்நிலைப் பள்ளியில் தேர்வெழுதிய 70 மாணவர்களும் தேர்ச்சி பெற்று, நுாறு சதவீத தேர்ச்சி சாதனை படைத்துள்ளனர்.
அதிக மதிப்பெண் பெற்ற செஞ்சி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், மஸ்தான் எம்.எல்.ஏ., விடம் வாழ்த்து பெற்றனர். செஞ்சி பேரூராட்சி சேர்மன் மொக்தியார் அலி, ஒன்றிய கவுன்சிலர் நெடுஞ்செழியன், தலைமையாசிரியர் செந்தில்குமார், பி.டி.ஏ., தலைவர் திலகவதி மற்றும் ஆசிரியர்கள் உடன் இருந்தனர்.