/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ குறைதீர் நாள் கூட்டத்தில் 818 கோரிக்கை மனுக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் 818 கோரிக்கை மனுக்கள்
குறைதீர் நாள் கூட்டத்தில் 818 கோரிக்கை மனுக்கள்
குறைதீர் நாள் கூட்டத்தில் 818 கோரிக்கை மனுக்கள்
குறைதீர் நாள் கூட்டத்தில் 818 கோரிக்கை மனுக்கள்
ADDED : ஜூன் 03, 2025 12:23 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 818 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்த வாராந்திர மக்கள் குறைதீர் நாள் கூட்டத்திற்கு, மாவட்ட வருவாய் அலுவலர் அரிதாஸ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். மனுக்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தொடர்புடைய அலுவலர்கள், மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.
முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைபட்டா, ஆதரவற்றோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டாமாறுதல், சாதிச்சான்றிதழ், தொழில் கடனுதவி, பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் வீடுகள், கலைஞர் கனவு இல்லத்தின் கீழ் வீடுகள், தாட்கோ கடனுதவி, வேளாண் உபகரணங்கள் கோருதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 818 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) யோகஜோதி, சப் கலெக்டர் முகுந்தன், பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் தமிழரசன், ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.