/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 70 கிலோ கஞ்சா கடத்தல் மரக்காணத்தில் இருவர் கைது 70 கிலோ கஞ்சா கடத்தல் மரக்காணத்தில் இருவர் கைது
70 கிலோ கஞ்சா கடத்தல் மரக்காணத்தில் இருவர் கைது
70 கிலோ கஞ்சா கடத்தல் மரக்காணத்தில் இருவர் கைது
70 கிலோ கஞ்சா கடத்தல் மரக்காணத்தில் இருவர் கைது
ADDED : மே 20, 2025 05:03 AM
விழுப்புரம்: ஆந்திராவில் இருந்து தொண்டிக்கு, 70 கிலோ கஞ்சா கடத்திய இருவரை மரக்காணம் அருகே போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அருகே உள்ள பிரம்மதேசம் இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார் நேற்று நல்லாளம் கூட்ரோட்டில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக வந்த காரை மடக்கி சோதனை செய்ததில், 70 கிலோ கஞ்சா கடத்தி செல்வது தெரியவந்தது.
காரில் இருந்தவர்கள் சென்னை திருமுல்லைவாயில் மதன், 45; ரெட் ஹில்ஸ் ஆட்டந்தாங்கல் நாகராஜ், 30; என்பது தெரியவந்தது. இருவரும் ஆந்திரா மாநிலம், நெல்லுாரில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம், தொண்டிக்கு கஞ்சா கடத்தி செல்வது தெரிந்தது.
பிரம்மதேசம் போலீசார் வழக்குப் பதிந்து, மதன், நாகராஜை கைது செய்து, கார் மற்றும் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.