ADDED : செப் 09, 2025 03:19 AM
விழுப்புரம் : மாவட்டத்தில் அதிகபட்சமாக முகையூரில் 50 மி.மீ., மழை பதிவாகியது.
விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்தது. அதன்படி, விழுப்புரத்தில் 10 மி.மீ., மழை பதிவானது.
கோலியனுாரில் 17, வளவனுாரில் 16, கெடாரில் 34, முண்டியம்பாக்கத்தில் 25, நேமூரில் 20.20, கஞ்சனுாரில் 8, சூரப்பட்டில் 23, திண்டிவனத்தில் 12, செஞ்சியில் 41, செம்மேட்டில் 14.60, வல்லத்தில் 34, அனந்தபுரத்தில் 20, அவலுார்பேட்டையில் 38, வளத்தியில் 31, மணம்பூண்டியில் 43, முகையூரில் 50, அரசூரில் 1, திருவெண்ணெய்நல்லுாரில் 25 மி.மீ., என மொத்தம் 462.80 மி.மீ., மழை பெய்தது.
மாவட்டத்தில் சராசரியாக 22.04 மி.மீ., மழை பதிவாகியது.