/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பஸ் பயணியிடம் 5 சவரன் நகை திருட்டு பஸ் பயணியிடம் 5 சவரன் நகை திருட்டு
பஸ் பயணியிடம் 5 சவரன் நகை திருட்டு
பஸ் பயணியிடம் 5 சவரன் நகை திருட்டு
பஸ் பயணியிடம் 5 சவரன் நகை திருட்டு
ADDED : மே 17, 2025 11:38 PM
செஞ்சி: பஸ் பயணியிடம் 5 சவரன் நகை திருடி சென்ற மர்ம பெண்களை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம், நல்லவன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி 45, கடந்த 1ம் தேதி சென்னையில் இருந்து திருவண்ணாமலைக்கு தனது மனைவி குழந்தைகளுடன் அரசு பஸ்ஸில் வந்தார். செஞ்சி அடுத்த நாட்டார் மங்கலத்தில் பஸ்ஸில் ஏறிய மூன்று பெண்கள் மூர்த்தி மனைவி அருகில் அமர்ந்தனர்.
அந்த மூன்று பெண்களும் செஞ்சியில் இறங்கினர். இதன் பிறகு மூர்த்தி மனைவி வைத்திருந்த கைப்பையை சோதனை செய்த போது, அதில் இருந்த ரூ. 3 லட்சம் மதிப்புள்ள 5 சவரன் நகை திருடு போய் இருந்தது. செஞ்சி போலீசார் வழக்கு பதிந்து மர்ம பெண்களை தேடி வருகின்றனர்.


