Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ முதியவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

 முதியவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

 முதியவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

 முதியவரை கத்தியால் குத்திய 2 பேர் கைது

ADDED : டிச 01, 2025 05:33 AM


Google News
Latest Tamil News
வானுார்: குடி போதையில் முதியவரை கத்தியால் குத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவக்கரை அடுத்த எறையூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் தேவராஜ், 68; இவர், தனது மகள் அஞ்சலை வீட்டில் வசித்து வருகிறார். கடந்த 28ம் தேதி இரவு 11:00 மணிக்கு, அவரது வீட்டின் அருகே 2 பேர் குடிபோதையில் சத்தமாக பேசினர்.

இதனை தேவராஜ் தட்டிக்கேட்டார். இதனால், ஆத்திரமடைந்த இருவரும் தேவராஜை கத்தியால் வயிற்றில் குத்தினர். உடன், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இதுறித்து தேவராஜ் அளித்த புகாரின் பேரில், எறையூர் பூபாலன் மகன் முருகன், 25; அதே பகுதியைச் சேர்ந்த ராமு மகன் ராம்குமார், 19; ஆகிய இருவர் மீதும் வழக்குப் பதிந்து, கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us