ADDED : செப் 09, 2025 11:48 PM
விழுப்புரம்; கஞ்சா வைத்திருந்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
காணை சப் இன்ஸ்பெக்டர் அன்பழகன், வயலாமூர் சுடுகாடு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, காணை குப்பத்தை சேர்ந்த சக்திவேல், 20; மற்றும் கிரிதரன், 20; ஆகியோர் கஞ்சா வைத்திருந்தது தெரியவந்தது. போலீசார் வழக்குப் பதிந்து சக்திவேல், கிரிதரனை கைது செய்து விசாரிக்கின்றனர்.