/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ போலீசாரிடம் வாக்குவாதம் வானுார் அருகே 2 பேர் கைது போலீசாரிடம் வாக்குவாதம் வானுார் அருகே 2 பேர் கைது
போலீசாரிடம் வாக்குவாதம் வானுார் அருகே 2 பேர் கைது
போலீசாரிடம் வாக்குவாதம் வானுார் அருகே 2 பேர் கைது
போலீசாரிடம் வாக்குவாதம் வானுார் அருகே 2 பேர் கைது
ADDED : மே 28, 2025 07:11 AM
வானுார் : வானுார் அருகே கோவில் திருவிழா பாட்டு கச்சேரியில் போலீசாரிடம் வாக்குவாதம் செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.
வானுார் அடுத்த கரசானுார் கிராமத்தில் கடந்த ஒரு வாரமாக திரவுபதியம்மன் கோயில் திருவிழா நடந்தது. விழாவில் நேற்று முன்தினம் இரவு பாட்டு கச்சேரிக்கு ஏற்பாடு செய்திருந்தனர். அப்போது பாட்டுக் கச்சேரியில் ஒரு சில ஜாதி ரீதியிலான பாடல்களைப் பாட வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கை செய்தனர்.
அதையும் மீறி, பாட முயன்ற போது, போலீசார் அதை தடுத்து மைக்கை நிறுத்தினர். அப்பொழுது அந்த கிராமத்தைச் சேர்ந்த கோபால், 38; தட்சிணாமூர்த்தி, 42; ஆகியோர் பாட்டு கச்சேரியை ஏன் நிறுத்தினீர்கள் என கேட்டு போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிரச்னை செய்தனர்.
இது தொடர்பாக வானுார் போலீசார் வழக்கு பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.