/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மீண்டும் சாராய சம்பவம்: விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 7 பேர் உடல் நலம் பாதிப்புமீண்டும் சாராய சம்பவம்: விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 7 பேர் உடல் நலம் பாதிப்பு
மீண்டும் சாராய சம்பவம்: விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 7 பேர் உடல் நலம் பாதிப்பு
மீண்டும் சாராய சம்பவம்: விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 7 பேர் உடல் நலம் பாதிப்பு
மீண்டும் சாராய சம்பவம்: விக்கிரவாண்டி அருகே சாராயம் குடித்த 7 பேர் உடல் நலம் பாதிப்பு
UPDATED : ஜூலை 10, 2024 05:51 PM
ADDED : ஜூலை 10, 2024 12:57 PM

விக்கிரவாண்டி: இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியில் இருந்து கொண்டு வந்த சாராயத்தை குடித்த 7 பேருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் 5 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியதாக டாக்டர் தெரிவித்து உள்ளார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 66 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி., விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. கள்ளச்சாராயம் காய்ச்சுவது, கடத்துவது தெரியவந்தால், போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்நிலையில், இடைத்தேர்தல் நடக்கும் விக்கிரவாண்டி அருகே மதுரா பூரிகுடிசை என்ற கிராமத்தில், புதுச்சேரியில் இருந்து கொண்டு வந்த சாராயத்தை குடித்த 7 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை முதல்வர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விழுப்புரம், விக்கிரவாண்டி வட்டம் கஞ்சனூர் மதுரா பூரி குடிசை கிராமத்தில் கடந்த 8 ம் தேதி புதுச்சேரி சாராயத்தை குடித்த 7 பேர் உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டதாக தகவல் வந்தது.
முன்னெச்சரிக்கையாக விழுப்புரம் போலீார் 7 பேரையும் அன்றே விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். 5 நபர்கள் இன்று சிகிச்சை முடித்து இன்று( ஜூலை10) வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். மீதமுள்ள இரண்டு நபர்களுக்கு குடிபழக்கம் இருந்து வந்ததால், மஞ்சள் காமாலை நோயினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.
புதுச்சேரி சாராயம் வாங்கி வந்த நபர் மீது காஞ்சனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் காரணமாக விக்கிரவாண்டி தொகுதியில் டாஸ்மாக் கடைகள் பூட்டப்பட்டு உள்ளன.