Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ 108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிக்கு நாளை தேர்வு முகாம்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிக்கு நாளை தேர்வு முகாம்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிக்கு நாளை தேர்வு முகாம்

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் டிரைவர் பணிக்கு நாளை தேர்வு முகாம்

ADDED : மே 14, 2025 12:44 AM


Google News
விழுப்புரம் : விழுப்புரத்தில் 108 ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவருக்கான வேலை வாய்ப்பு தேர்வு முகாம் நாளை நடக்கிறது.

விழுப்புரம் மாவட்ட 108 ஆம்புலன்ஸ் திட்ட மேலாளர் ராஜசேகர் செய்திக்குறிப்பு:

108 ஆம்புலன்ஸ் மருத்துவ உதவியாளர் மற்றும் டிரைவர் பணிக்கு நாளை 15ம் தேதி எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு நடக்கிறது. விழுப்புரம் அரசு மருத்துவமனை எதிரே உள்ள மாவட்ட சுகாதார அலுவலர் அலுவலகத்தில் காலை 9:00 மணிக்கு தேர்வு துவங்குகிறது.

மருத்துவ உதவியாளர் பணிக்கு, வயது வரம்பு 19 வயது முதல் 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.

கல்வித்தகுதி பி.எஸ்.சி., நர்சிங் , ஜி.என்.எம்., - ஏ.என்.எம்., - டி.எம்.எல்.டி. (பிளஸ் 2 படிப்பு) அல்லது லைப் சயின்ஸ் பட்டதாரிகள் (பி.எஸ்.சி., விலங்கியல், தாவரவியல், பயோ கெமிஸ்ட்ரி, மைக்ரோபயாலஜி, பயோடெக்னாலஜி). மருத்துவ உதவியாளர் பணிக்கு 16 ஆயிரத்து 970 ஊதியமாக வழங்கப்படும். அசல் சான்றிதழ் கட்டாயமாக எடுத்து வர வேண்டும். முக கவசம் அணிந்து தேர்வில் பங்கேற்க வேண்டும்.

டிரைவர் பணிக்கு, 24 வயது முதல் 35 வயதிற்குட்பட்ட ஆண்கள் பங்கேற்கலாம்.

கல்வி தகுதி, பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இலகு ரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் மற்றும் பேட்ச் வாகன உரிமம் எடுத்து குறைந்தபட்சம் ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். 16 ஆயிரத்து 790 ஊதியமாக வழங்கப்படும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us