Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ செக்யூரிட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

செக்யூரிட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

செக்யூரிட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

செக்யூரிட்டி கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை

ADDED : ஜூலை 12, 2024 05:18 AM


Google News
Latest Tamil News
விழுப்புரம்: விழுப்புரம் அரகே செக்யூரிட்டியை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட் நேற்று தீர்ப்பு வழங்கியது.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி அடுத்த பூரிகுடிசை கிராமத்தை சேர்ந்தவர் தேவசகாயம், 64; குண்டலப்புலியூரில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக குடோன் செக்யூரிட்டி. கடந்த 2021ம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி இரவு பணியில் இருந்த இவர், குடோன் அருகே வி.சாத்தனுாரை சேர்ந்த சாமிக்கண்ணு, 70; என்பவருடன் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது, அங்கு குடிபோதையில் வந்த அசோகபுரி கிராமத்தை சேர்ந்த அன்பழகன் மகன் அருள்மொழி,29; வீண் தகராறு செய்து, தேவசகாயத்தை கட்டையால் தாக்கினார். தடுத்த சாமிக்கண்ணுவையும் தாக்கினார்.

படுகாயமடைந்த இருவரையும் அங்கிருந்தவர்கள் மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர்., அங்கு தேவசகாயம் இறந்தார்.

சாமிக்கண்ணு அளித்த புகாரின் பேரில் அருள்மொழியை கைது செய்த கெடார் போலீசார், அவர் மீது விழுப்புரம் செசன்ஸ் கோர்ட்டில் கொலை வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர்கள் சுப்ரமணியன், நடராஜன் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ணிமா, குற்றம் சாட்டப்பட்ட அருள்மொழிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.6,000 அபராதம் விதித்து நேற்று தீர்ப்பளித்தார்.

அதனைத் தொடர்ந்து அருள்மொழி, கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us