/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
மது அருந்தியதை தட்டிக்கேட்டதால் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை
ADDED : ஜூலை 27, 2024 02:03 AM
விழுப்புரம்,: வீட்டிற்கு மது அருந்திவிட்டு வந்ததை பெற்றோர் தட்டிக்கேட்டதால், தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம் அடுத்த களத்துமேட்டுக்குப்பம் பகுதியைச் சேர்ந்த அர்ஜுனன் மகன் ஆனந்தன், 27; வாகனத்தில் எடுத்துச்சென்று பாத்திரம் விற்பனை செய்து வருகிறார். இவர், நேற்று முன்தினம் உறவினர் வீட்டு விழாவிற்கு சென்றவர், மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை, அவரது பெற்றோர் தட்டிகேட்டதால், வாய் தகராறு ஏற்பட்டுள்ளது.
இதனால், விரக்தியில் இருந்த ஆனந்தன், கருங்காலிப்பட்டு அழகுநாச்சியம்மன் கோயில் அருகே உள்ள வேப்பமரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, அர்ஜூனன் கொடுத்த புகாரின் பேரில், காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.