ADDED : ஜூலை 12, 2024 06:18 AM
அவலுார்பேட்டை: வளத்தி அடுத்த கூடுவாம்பூண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுகுமார் மனைவி அஞ்சலா, 39; இவர், நேற்று முன்தினம் காலை 5:30, மணிக்கு குடிநீர் எடுத்து வருவதற்காக அதே ஊர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தார்.
அப்போது, பின்னால் வந்த கார் அஞ்சலாவின் மீது மோதியது. படுகாயமடைந்த அஞ்சலா சம்பவ இடத்திலேயே இறந்தார். புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.