/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வீடூர் அணை பகுதியில் விளையாட்டு திடல் அமைக்கப்படுமா? வீடூர் அணை பகுதியில் விளையாட்டு திடல் அமைக்கப்படுமா?
வீடூர் அணை பகுதியில் விளையாட்டு திடல் அமைக்கப்படுமா?
வீடூர் அணை பகுதியில் விளையாட்டு திடல் அமைக்கப்படுமா?
வீடூர் அணை பகுதியில் விளையாட்டு திடல் அமைக்கப்படுமா?
ADDED : ஜூலை 18, 2024 04:49 AM

வீடூர் டேம் பகுதியில் இளைஞர்கள் விளையாடுவதற்கான விளையாட்டு திடல் அமைக்கப்பட வேண்டும் என்று பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு உள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் மிக முக்கியமான சுற்றுலா தலமாக இருப்பது வீடூர் டேம் ஆகும். இந்த பகுதியில் சுமார் 6 ஆயிரத்திற்கு மேற்பட்ட கிராம மக்கள் வசித்து வருகின்றனர். வீடூர் டேம் சங்கராபரணி, தொண்டி ஆகிய இரு ஆறுகள் கூடுகின்ற இடமாகும்.
இங்கு காமராஜ் ஆட்சி காலத்தில் தமிழ்நாடு, புதுச்சேரி விவசாயிகள் நலனை கருத்தில் கொண்டு அணைக்கட்டு கட்டப்பட்டுள்ளது. அணையை பார்ப்பதற்கு புதுச்சேரி, விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, வேலூர், கடலூர் திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கல்வி சுற்றுலாவுக்கு மாணவர்களை இங்கு அழைத்து வருகின்றனர். மேலும் வீடூர் கிராமத்தை சுற்றிலும் பொம்பூர், சிறுவை, ஐவேலி, கணபதிபட்டு, அங்கனிகுப்பம், எழாய், குத்தாம்பூண்டி உட்பட 25க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.
இந்த கிராமத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். இவர்களுக்கான பொழுதுபோக்கு மற்றும் விளையாடுவதற்கு இடங்கள் அமைக்கப்படாததால் இளைஞர்கள் தாங்கள் நினைக்கும் இடங்களில் விளையாடி வருகின்றனர். எனவே அரசு சார்பில் வீடுர் டேம் பகுதியில் இளைஞர்கள் விளையாடுவதற்கு திடல் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் நவீன் குமார் கூறியதாவது:
மயிலம் ஒன்றியத்தில் வீடுர் ஊராட்சி அமைந்துள்ளது எங்களுடைய ஊர் ஒரு சுற்றுலா பகுதியாகும். மேலும் இங்குள்ள இளைஞர்கள் கபடி, கால்பந்து, பூப்பந்து, கிரிக்கெட் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுகளில் ஆர்வத்துடன் உள்ளனர்.
விளையாடுதற்கு தேவையான ஆடுகளம், தளவாடப் பொருட்கள் கிடைக்காமல் மிகுந்த அவதி அடைந்து வருகின்றனர். எனவே அரசு சார்பில் இவர்களுக்கு விளையாடுவதற்கான மைதானம் மற்றும் அதற்கான கருவிகளும் அரசின் சார்பில்வழங்கப்பட வேண்டும்' என கூறினார்.