ADDED : ஜூலை 08, 2024 05:05 AM

வானுார்: கணவரைக் காணவில்லை என போலீசில், மனைவி புகார் அளித்துள்ளார்.
கிளியனுார் அடுத்த கொஞ்சிமங்கலம் மெயின் ரோட்டைச் சேர்ந்தவர் ஏழுமலை மகன் சிவா, 43; இவர், கடந்த மாதம் 16ம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இது குறித்து அவரது மனைவி சுந்தரி அளித்த புகாரின் பேரில் கிளியனுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.