/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இணைய தள இணைப்பு கூடுதல் கலெக்டர் ஆய்வு இணைய தள இணைப்பு கூடுதல் கலெக்டர் ஆய்வு
இணைய தள இணைப்பு கூடுதல் கலெக்டர் ஆய்வு
இணைய தள இணைப்பு கூடுதல் கலெக்டர் ஆய்வு
இணைய தள இணைப்பு கூடுதல் கலெக்டர் ஆய்வு
ADDED : ஜூலை 20, 2024 05:44 AM
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அடுத்த பனையபுரம் ஊராட்சிக்கு இணைய தள இணைப்பு வழங்கப்பட்டது குறித்து கூடுதல் கலெக்டர் ஆய்வு செய்தார்.
விக்கிரவாண்டி ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சி அலுவலகங்களுக்கும், இணைய தள இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. பனையபுரம் ஊராட்சி அலுவலகத்திற்கு புதியதாக இணையதள இணைப்பு வழங்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது.
இதனை, நேற்று மாவட்ட கூடுதல் கலெக்டர் ஸ்ருதன்ஜெய் நாராயணன் ஆய்வு செய்து ஆன்லைன் மூலம் வரி வசூலிப்பு, ஒன்றிய அலுவலகம் மற்றும் ஊராட்சி அலுவலகத்திற்கும் இடையேயான கணக்கு பரிவர்த்தனை.
அரசு தலைப்புகளில் செலுத்த வேண்டிய கணக்குகள் பற்றிய விபரங்கள் குறித்து ஊராட்சி செயலாளரிடம் விளக்கினார்.
பி.டி.ஓ.,க்கள் சிவக்குமார், பாலச்சந்திரன், குலோத்துங்கன், திட்ட மேலாளர் கார்த்திக், ஊராட்சி தலைவர் காந்தரூபீ, பெல் நிறுவன பொறியாளர்கள் மணி, பிரகாஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.