/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ நிபந்தனையை ஏற்கிறோம் குரங்குகளை பிடியுங்கள் வனத்துறையிடம் முருக்கேரி மக்கள் கெஞ்சல் நிபந்தனையை ஏற்கிறோம் குரங்குகளை பிடியுங்கள் வனத்துறையிடம் முருக்கேரி மக்கள் கெஞ்சல்
நிபந்தனையை ஏற்கிறோம் குரங்குகளை பிடியுங்கள் வனத்துறையிடம் முருக்கேரி மக்கள் கெஞ்சல்
நிபந்தனையை ஏற்கிறோம் குரங்குகளை பிடியுங்கள் வனத்துறையிடம் முருக்கேரி மக்கள் கெஞ்சல்
நிபந்தனையை ஏற்கிறோம் குரங்குகளை பிடியுங்கள் வனத்துறையிடம் முருக்கேரி மக்கள் கெஞ்சல்
ADDED : ஜூலை 09, 2024 03:53 AM
மரக்காணம் அடுத்த சிறுவாடி, முருக்கேரியில் சுற்றித் திரியும் குரங்குகளைப் பிடிக்க வனத்துறையினர் போடும் நிபந்தனையால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
மரக்காணம் ஒன்றியத்திற்குட்பட்ட சிறுவாடி, முருக்கேரி பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக குரங்குகள் அதிகளவில் சுற்றித்திரிகின்றன. இந்த குரங்குகள் கடை, வீடுகளில் புகுந்து பொருட்களை நாசம் செய்வதும், கடை வீதிகளில் பொருட்கள் வாங்கிச் செல்பவர்களிடம் இருந்து பொருட்களை பிடுங்கிச் செல்வதும், அப்பகுதியில் நடந்து செல்லும் சிறுவர்களை விரட்டிச் சென்றும் அச்சுறுத்துவதுமாக உள்ளன.
கடந்த ஆண்டு சிறுவாடியைச் சேர்ந்த பொதுமக்கள் திண்டிவனம் வனத்துறையினரிடம் குரங்குகளைப் பிடித்து காப்புக் காட்டில் விட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை மனு கொடுத்தனர். அதற்கு வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க ஆகும் செலவுகளை பொதுமக்களே ஏற்றுக் கொள்ளவேண்டும்.
மேலும் ஒரு குரங்கிற்கு ஒரு தொகை என நிபந்தனை விதித்தனர். அதன் பின் அந்த பகுதி இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வீடு, வீடாக 100 ரூபாய் வசூல் செய்து வனத்துறையினரிடம் கொடுத்தபின் சிறுவாடியில் மட்டும் குரங்குகளை பிடித்துவிட்டு முருக்கேரி பகுதியில் உள்ள குரங்குகளை பிடிக்காமல் அப்படியே விட்டுச்சென்றனர்.
இந்நிலையில் திண்டிவனம் - மரக்காணம் சாலை அகலப்படுத்தும் பணிக்காக முருக்கேரியில் சாலையோர மரங்களை வெட்டியதால், அப்பகுதிகளில் வீட்டில் உள்ள மரங்களில் குரங்குகள் தஞ்சமடைந்துள்ளன. இதனால் அப்பகுதி மக்கள் வீட்டில் உள்ள மரங்களை வெட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அப்பகுதி வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வனத்துறையினரிடம் பல முறை புகார் தெரிவித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.
மேலும் குரங்குகள் பிடிக்க ஆகும் செலவினங்களை ஏற்றுக்கொள்வதாக அப்பகுதி மக்கள் கூறிய பின்னும் வனத்துறையினர் செவி சாய்க்கவில்லை. மரங்கள் வளர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் மாவட்ட வனத்துறையினர் குரங்குகளை பிடிக்க நடவடிக்கை எடுத்தால், எஞ்சியுள்ள மரங்களையாவது வெட்டாமல் தடுக்கலாம்.