/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விழுப்புரத்தில் 22 மி.மீ., மழை பதிவு விழுப்புரத்தில் 22 மி.மீ., மழை பதிவு
விழுப்புரத்தில் 22 மி.மீ., மழை பதிவு
விழுப்புரத்தில் 22 மி.மீ., மழை பதிவு
விழுப்புரத்தில் 22 மி.மீ., மழை பதிவு
ADDED : ஜூன் 08, 2024 04:43 AM
விழுப்புரம், : விழுப்புரத்தில் நேற்று முன்தினம் இரவு பரவலாக 22 மி.மீ., மழை பதிவானது.
விழுப்புரம் மாவட்டத்தில், அக்னி வெயில் தாக்கம் முடிந்த நிலையில், கோடை வெயிலின் தாக்கம் தொடர்ந்து வருகிறது. இதனை தணிக்கும் வகையில் இடையே கடந்த சில தினங்களாக விட்டு, விட்டு மழை பெய்து வருகிறது.
நேற்று முன்தினம் காலை 10:00 மணி முதல் பகல் நேரங்களில் வழக்கம் போல் வெயில் சுட்டெரித்தது. இதனையடுத்து, இரவு 9:00 மணிக்கு திடீரென காற்றுடன் கூடிய மழை பெய்தது.
தொடர்ந்து ஒரு மணி நேரம் மழை பெய்தது. தொடர்ந்து, மாவட்டம் முழுவதும் இரவு பரவலாக விட்டு, விட்டு சாரல் மழை பெய்தது. நேற்று காலையில் வெயிலின் தாக்கம் குறைந்திருந்தது.
மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை 5:00 மணி முதல் நேற்று காலை 8:00 மணி வரை பெய்த மழை அளவு மி.மீ., விபரம்:
விழுப்புரம் 22, கோலியனுார் 3, வளவனுார் 2, முண்டியம்பாக்கம் 4, நேமூர் 6, மரக்காணம் 1, செஞ்சி 2, அவலுார்பேட்டை 3, வளத்தி 4, அரசூர் 14, திருவெண்ணெய்நல்லுார் 13 மி.மீ., என மொத்தம் 75 மி.மீ., சராசரி 4 மி.மீ., மழை பதிவானது.