/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூலை 23, 2024 11:07 PM
மயிலம்: மயிலம் அருகே குடிநீர் வழங்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மயிலம் அடுத்த அவ்வையார்குப்பம் ஊராட்சிக்குட்பட்ட நடுக்குப்பம் கிராமத்தில் சில தினங்களுக்கு முன் குடிநீர் பைப் சேதம் அடைந்தது. இதனால் பொதுமக்க ளுக்கு சரியான முறையில் குடிநீர் கிடைக்கவில்லை.
இதனால், ஆத்திர மடைந்த அப்பகுதி மக்கள் நேற்று மதியம் 12:30 மணிக்கு தீவனுார் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மயிலம் சப் இன்ஸ்பெக்டர் ராஜி, ஊராட்சி ஒன்றிய அலுவலர் பாபு ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி, உடைந்த பைப் லைனை சரி செய்து குடிநீர் வழங்கப்படும் என உறுதியளித்ததைத் தொடர்ந்து 1:00 மணிக்கு அனைவரும் கலைந்து சென்றனர்.