/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொடர் மின் வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல் தொடர் மின் வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
தொடர் மின் வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
தொடர் மின் வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
தொடர் மின் வெட்டை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியல்
ADDED : ஜூன் 02, 2024 05:13 AM
அவலுார்பேட்டை: மேல்மலையனுாரில் தொடர் மின் வெட்டை கண்டித்து கிராம மக்கள் நள்ளிரவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
மேல்மலையனுாரில் பருவதராஜகுல தெரு, ஒத்தவாடை தெரு, அங்காளம்மன் நகர், குளத்து தெரு உள்ளிட்ட பகுதிகளில் 200க்கும் மேற்பட்ட வீடுகளில் மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு அக்னி குளம் அருகே உள்ள மின் மாற்றியிலிருந்து மின் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில் அதிக லோடு காரணமாக இந்த மின்மாற்றியிலிருந்த வீட்டு இணைப்புகளுக்கு வள்ளலார் மன்றம் அருகே உள்ள மின்மாற்றிக்கு மாற்றப்பட்டு நேற்று முன்தினம் மின் சப்ளை செய்யப்பட்டது.
இந்த பணிகளால் நேற்று முன்தினம் காலை 9:00 மணியிலிருந்து மதியம் 2:30 மணி வரை மின் வெட்டு ஏற்பட்டது. அதன் பிறகு வழங்கப்பட்ட மின்சாரம் இரவு 10:00 மணிவரை அடிக்கடி நிறுத்தப்பட்டது. இரவு 10:00 மணிக்கு மேல் மின் சப்ளை முழுதுமாக துண்டிக்கப்பட்டது.
வழக்கத்திற்கு மாறாக அனல் காற்றும், வெப்பமும் வீசுவதால் குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், நோயாளிகள் என அனைவரும் மின்வெட்டால் துாக்கத்தை இழந்து பாதிக்கப்பட்டனர்.
இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வள்ளலார் மன்றம் அருகே நள்ளிரவு 12:30, மணியளவில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து வந்த வளத்தி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் குமரேசன் மற்றும் போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானம் செய்து 1:00 மணிக்கு கலைந்து போகச் செய்தனர்.