/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டி தொகுதியில் விதிமீறல்கள் பா.ம.க., வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டு விக்கிரவாண்டி தொகுதியில் விதிமீறல்கள் பா.ம.க., வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டு
விக்கிரவாண்டி தொகுதியில் விதிமீறல்கள் பா.ம.க., வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டு
விக்கிரவாண்டி தொகுதியில் விதிமீறல்கள் பா.ம.க., வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டு
விக்கிரவாண்டி தொகுதியில் விதிமீறல்கள் பா.ம.க., வழக்கறிஞர் பாலு குற்றச்சாட்டு
ADDED : ஜூன் 30, 2024 05:18 AM

விக்கிரவாண்டி, : 'விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலகத்தில் அதிகாரிகளே இல்லை' என பா.ம.க., சமூக நீதி பேரவை தலைவர் வழக்கறிஞர் பாலு கூறினார்.
விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் நேற்று பிற்பகல் 3:15 மணியளவில் அவரது தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் இடைத் தேர்தல் குறித்து ஏற்கனவே அளிக்கப்பட்ட புகார் மனு மீதான விசாரணை குறித்து கேட்டறிய வந்தனர். அலுவலகத்தில், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் இல்லாததால் 45 நிமிடம் காத்திருந்தனர்.
அப்போது அவர், நிருபர்களிடம் கூறியதாவது:
நாங்கள் பல தருணங்களில் புகார் கொடுக்க வந்த போதெல்லாம் தேர்தல் நடத்தும் அதிகாரி இல்லை. இன்றும் இல்லை. நேற்று ஆசூர் கிராமத்தில் தி.மு.க., கிளை செயலாளர் கண்ணதாசன் என்பவர் சட்ட விரோதமாக மணல் எடுத்ததை அ.தி.மு.க., கிளை செயலாளர் கந்தன், அதிகாரிகளிடத்தில் புகார் செய்தார். அதற்காக தி.மு.க., வினர் அ.தி.மு.க., கிளைச் செயலாளர் கந்தன், பா.ம.க., கிளைத் தலைவர் அண்ணாதுரை என்பவரையும் தாக்கியுள்ளனர்.
முன்பு நாங்கள் கொடுத்த தொகுதியில் இறந்தவர்களின் 15 ஆயிரம் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படவில்லை. தொகுதியில் 9க்கும் மேற்பட்ட அமைச்சர்கள் தங்கி தேர்தல் பணி செய்து விதிமீறல்களில் ஈடுபடுகின்றனர்.
சட்டசபை கூட்டம் முடிந்த பிறகு இன்னும் அமைச்சர்கள் வர உள்ளனர். அவர்களை ஆர்.டி.ஓ., தகுதியில் உள்ள தேர்தல் நடத்தும் அலுவலர் சமாளிப்பாரா என்பது கேள்விக்குறியாக உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மக்கள் சுதந்திரமாக ஓட்டளிக்க வேண்டிய நிலையை தேர்தல் ஆணையம் உருவாக்க வேண்டும்.
இவ்வாறு பாலு கூறினார்.