/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: தற்போது வரை ரூ.1.07 கோடி பறிமுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: தற்போது வரை ரூ.1.07 கோடி பறிமுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: தற்போது வரை ரூ.1.07 கோடி பறிமுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: தற்போது வரை ரூ.1.07 கோடி பறிமுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல்: தற்போது வரை ரூ.1.07 கோடி பறிமுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் தகவல்
ADDED : ஜூலை 04, 2024 10:04 PM

விழுப்புரம் : விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் விதிமுறைகள் மீறியதாக 43 வழக்குகள் பதியப்பட்டு விசாரணையில் உள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர் பழனி தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் நன்னடத்தை விதி அமலுக்கு வந்தது.
கடந்த ஜூன் 10ம் தேதி முதல் இந்த தொகுதியில் 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள், 3 பறக்கும் படை குழுக்கள், 3 வீடியோ கண்காணிப்பு குழுக்கள் மூலம் தேர்தல் நடத்தை விதிமீறல்கள் கண்காணிக்கப்படுகிறது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் தொடர்பாக தொடர்ந்து, புகார்கள் வருவதால், கூடுதலாக 2 கண்காணிப்பு குழுக்களை நியமித்து கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
தற்போது வரை ஆவணங்கள் ஏதுமின்றி எடுத்துச் சென்ற ஒரு கோடியே 7 லட்சத்து 39 ஆயிரத்து 600 ரூபாய் மற்றும் 27 கிலோ வெள்ளி கொலுசுகள், 84 சேலைகள், 18 வேட்டிகள், 50 துண்டுகள் ஆகியவை கைப்பற்றப்பட்டுள்ளது.
மேலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறியதன் அடிப்படையில் போலீசாரால் 43 வழக்குகள் பதியப்பட்டு விசாரணையில் உள்ளது.
நேற்று முன்தினம் கண்காணிப்பு அலுவலர்களோடு ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டது. இதில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் கடைபிடிப்பதை உறுதி செய்ய வேண்டும் என கூறப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள் மீறுவதாக புகார்கள் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தேர்தல் நடத்தும் அலுவலருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுஉள்ளது.