/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கடற்கரையில் ரிசாட் கழிவுகள் கொட்டும் வீடியோ வைரல் கடற்கரையில் ரிசாட் கழிவுகள் கொட்டும் வீடியோ வைரல்
கடற்கரையில் ரிசாட் கழிவுகள் கொட்டும் வீடியோ வைரல்
கடற்கரையில் ரிசாட் கழிவுகள் கொட்டும் வீடியோ வைரல்
கடற்கரையில் ரிசாட் கழிவுகள் கொட்டும் வீடியோ வைரல்
ADDED : ஜூன் 05, 2024 11:02 PM
மரக்காணம்: கோட்டக்குப்பத்தில் உள்ள ரிசாட்டில் இருந்து கழிவுகளை கடற்கரையில் கொட்டும் வீடியே சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம், ஆரோவில் பகுதியில் நுாற்றுக்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள் உள்ளன. பெரும்பாலான ரிசார்ட்களில் சேகரிக்கப்படும் மதுபான பாட்டில்கள், கழிவுகள், பிளாஸ்டிக் குப்பைகளை ரிசார்ட் ஊழியர்கள் கடற்கரையில் கொண்டு வந்து கொட்டி விட்டு செல்கின்றனர்.
இதனால், கடல் வாழ் உயிரினம், கடல் வளம் பாதிக்கப்படுகிறது. சுற்றுச்சுழலுக்கு கேடு விளைவிப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.
கோட்டக்குப்பம் பகுதியில் உள்ள கடற்கரை ரிசாட்டில் இருந்து கழிவுகள், குப்பைகளை பிளாஸ்டிக் பைகளில் ஊழியர்கள் எடுத்து வந்து கடற்கரை ஓரம் கொட்டிவிட்டு செல்லும் வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.