/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ வாணியர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம் வாணியர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம்
வாணியர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம்
வாணியர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம்
வாணியர் முன்னேற்ற சங்க செயற்குழு கூட்டம்
ADDED : ஜூலை 07, 2024 04:08 AM
திண்டிவனம்: திண்டிவனத்தில் வாணியர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் நடந்தது.
திண்டிவனம் வட்டார வாணியர் முன்னேற்ற சங்கத்தின் செயற்குழு கூட்டம் வாணியர் சங்க சமுதாய நல திருமண மண்டபத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சங்கத் தலைவர் வேல்முருகன் தலைமை தாங்கினார். சங்க ஆலோசகர் கண்ணன் ,துணைத் தலைவர்கள் ஜோதி, தெய்வசிகாமணி, சந்திரன் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் வழக்கறிஞர் கார்த்திக் கருணாகரன் வரவேற்றார். சங்க காப்பாளர் கல்கண்டு சுந்தரம், சங்க கவுரவ தலைவரான சாணக்யா கல்வி குழும தலைவர் தேவராஜ் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக நடத்த மத்திய, மாநில அரசுகளை கேட்டுக் கொள்வது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் சீனிவாசன், விநாயகம்,உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். பொருளாளர் பாலாஜி நன்றி கூறினார்.