/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ தொடர்ந்து 55 ஆண்டுகள் மல்லர் கம்பம் பயிற்சி ஓய்வறியாத உடற்கல்வி ஆசிரியர் உலகதுரை தொடர்ந்து 55 ஆண்டுகள் மல்லர் கம்பம் பயிற்சி ஓய்வறியாத உடற்கல்வி ஆசிரியர் உலகதுரை
தொடர்ந்து 55 ஆண்டுகள் மல்லர் கம்பம் பயிற்சி ஓய்வறியாத உடற்கல்வி ஆசிரியர் உலகதுரை
தொடர்ந்து 55 ஆண்டுகள் மல்லர் கம்பம் பயிற்சி ஓய்வறியாத உடற்கல்வி ஆசிரியர் உலகதுரை
தொடர்ந்து 55 ஆண்டுகள் மல்லர் கம்பம் பயிற்சி ஓய்வறியாத உடற்கல்வி ஆசிரியர் உலகதுரை
ADDED : ஜூலை 18, 2024 06:05 AM

விழுப்புரம் : விழுப்புரத்தில், கடந்த 55 ஆண்டுகளாக மாணவர்களுக்கு மல்லர் கம்ப பயிற்சி முகாமை, தனது 80 வது வயதிலும் உடற்கல்வி ஆசிரியர் உலகதுரை தொடர்ந்து நடத்தி வருகிறார்.
விழுப்புரத்தைச் சேர்ந்த உடற்கல்வி ஆசிரியரான உலகதுரை, மல்லர் கம்ப பயிற்சியில், தேசிய போட்டிகளுக்கு நுாற்றுக்கணக்கான மாணவர்களை உருவாக்கி சாதனை படைத்துள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுார் கபிலர் அரசு பள்ளியில், கடந்த 1959 ம் ஆண்டு பத்தாம் வகுப்பு முடித்தார். தொடர்ந்து கோவை மாருதி உடற் கல்வி ஆசிரியர் பயிற்சி கல்லுாரியில் படித்து முடித்து, சங்கராபுரம் அடுத்த பிர்மகுண்டம் அரசு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியில் சேர்ந்தார்.
பின், 39 ஆண்டு பணியாற்றி, 1999 ம் ஆண்டு, அன்னியூர் அரசு பள்ளியில் பணியாற்றி, ஓய்வு பெற்றார்.
இதற்கிடையே 1970ம் ஆண்டு முதல், மல்லர் கம்பம் விளையாட்டு, மால்கம் (ஜிம்னாஸ்டிக்) விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கத் துவங்கினார். இவர், தமிழ்நாடு மல்லர் கம்ப கழகத்தை துவக்கி, 200 மாணவர்களுக்கு முறையான பயிற்சி அளித்து, மாவட்ட அளவில் மட்டுமின்றி, மாநில, தேசிய அளவிலான விளையாட்டு வீரர்களை உருவாக்கி வந்துள்ளார். இவரிடம் பயிற்சி பெற்ற மாணவர்கள், தொடர்ந்து 18 ஆண்டுகளாக தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்று வருகின்றனர்.
தமிழ்நாடு மல்லர் கம்பம் கழகத்தின் தலைவர் ஜனார்த்தனன், செயலாளர் உடற்கல்வி ஆசிரியர் செந்தில்குமார் ஆகியோர் மேற்பார்வையில், 28 மாவட்டங்களில் பயிற்சி மையம் துவக்கப்பட்டுள்ளது. இங்கு 200 பயிற்சியாளர்கள் மூலம் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மல்லர் கம்பம் பயிற்சி பெற்றுள்ளனர்.
இதேபோல், தமிழ்நாடு மால்கம் பயிற்சியாளர் ஆதித்தன் மேற்பார்வையில், நுாற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் பயிற்சி பெற்று பல்வேறு போட்டிகளில் சாதனை படைத்து வருகின்றனர்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுகளை போற்றும் வகையில், கோவில் திருவிழாக்களில் வழுக்கு மரம் ஏறுதல், இன்றளவும் நடைபெற்று வருகிறது. இதனை பின்பற்றி, மல்லர் கம்பம் விளையாட்டு பயிற்சியின் போது, வழுக்கு மரத்தில் ஏறி மாணவர்கள் பல்வேறு சாதனைகளை நிகழ்ச்சி வருகின்றனர்.
இதில் பங்கேற்கும் மாணவர்களது உடல் ஆரோக்கியத்தை பாதுகாப்பதுடன், விளையாட்டு போட்டிகளில் தேசிய சாதனைபுரியும் மாணவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு காத்திருக்கிறது.