ADDED : ஜூன் 18, 2024 05:10 AM
விழுப்புரம்: விழுப்புரத்தில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம் டவுன் சப் இன்ஸ்பெக்டர் பிரியங்கா மற்றும் போலீசார் நேற்று மாலை வி.மருதூர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, பிள்ளையார்கோவில் தெரு சந்திப்பில் நின்றுகொண்டு, தமிழக அரசால் தடை செய்யப்பட்ட வெளி மாநில லாட்டரி சீட்டுகளை விற்றவர்களை பிடித்தனர்.
அவர்கள், அதே பகுதியை சேர்ந்த நடராஜன் மகன் ஆனந்தராஜ், 34; ராமு மகன் சுரேஷ், 40; என்பதும், தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்றதும் தெரிந்ததால், இரண்டு பேரையும் விழுப்புரம் டவுன் போலீசார் கைது செய்து, லாட்டரி சீட்டுகள் மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.