/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ த.வெ.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா த.வெ.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா
த.வெ.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா
த.வெ.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா
த.வெ.க., பொதுச்செயலாளர் பிறந்த நாள் விழா
ADDED : ஜூலை 20, 2024 05:39 AM

விழுப்புரம்: தமிழக வெற்றிக்கழக மாநில பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த் பிறந்தநாள் விழா, விக்கிரவாண்டி தொகுதி தலைமை சார்பில் கொண்டாடப்பட்டது.
விக்கிரவாண்டி அடுத்த து.தாங்கல் நாகாத்தம்மன் கோவிலில் நேற்று முன்தினம் புஸ்சி ஆனந்த் பெயரில் கட்சி நிர்வாகிகள், சிறப்பு அபிஷேகம் செய்து, வேலா காப்பகத்தில் மதிய உணவு வழங்கினர். விஜய் மக்கள் இயக்கம் விழுப்புரம் மாவட்ட பொறுப்பாளர் பரணி பாலாஜி, தலைவர் மோகன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் நடந்த நிகழ்ச்சிக்கு, துணை தலைவர் வடிவேல் தலைமை தாங்கினார்.
ஒன்றிய தலைவர் சேகர், செயலாளர் காமராஜ், பொருளாளர் ரமேஷ் (எ) சக்திவேல், துணைச் செயலாளர் பாரதி, பொறுப்பாளர் நவீன்ராஜ், இணை பொறுப்பாளர் ராம், நகர தொகுதி இணை பொறுப்பாளர்கள் விஜய் ரகு, தனஞ்செழியன், சத்தியவாணி.
நிர்வாகிகள் சரண், முனுசாமி, கணேஷ், அருள்ஜோதி, கார்த்திக், முருகதாஸ், ரஞ்சித், அய்யப்பன், சரண்ராஜ், சிவகுரு, ஊராட்சி தலைவர் தாஸ், பூமிநாதன், ஜெகதீசன், சாய்ராம், பிரகாஷ், அரசு, பிரசாந்த், முனுசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.