ADDED : ஜூலை 25, 2024 05:15 AM
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தை அடுத்து, கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய மற்றும் சாராய வியாபாரிகளுடன் தொடர்புடைய போலீசார் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, கடந்த வாரம் விழுப்புரம் மாவட்டத்தில் 30 போலீசார் வேலுார் சரகத்திற்கு மாற்றப்பட்டனர். அதன் தொடர்ச்சியாக, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் தங்ககுருநாதனை வேலுார் சரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.
கள்ளச்சாராய விற்பனை தொடர்பாக தனிப்பிரிவு போலீசார் மீது வந்த தொடர் புகார் மற்றும் இடமாறுதலில் பாரபட்சமாக நடந்து கொண்டதாக எழுந்த புகார்களின் பேரில் இந்த அதிரடி இடமாற்றம் நடைபெற்றுள்ளது.