/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு பயிற்சி
ADDED : ஜூன் 24, 2024 06:04 AM

விக்கிரவாண்டி, : விக்கிரவாண்டியில் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கான பயிற்சி நேற்று நடந்தது.
விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் வரும் ஜூலை 10ம் தேதி நடக்கிறது. தொகுதியில் உள்ள 275 ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு நேற்று மற்றும் வரும் 30, ஜூலை 9ம் தேதி என 3 கட்டங்களாக நடக்கிறது.
நேற்று லட்சுமிபுரம் தனியார் கல்லுாரியில் துவங்கிய பயிற்சி முகாமிற்கு தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திரசேகர் தலைமை தாங்கி பயிற்சியை துவக்கி வைத்தார்.
உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் தாசில்தார் யுவராஜ், தனி தாசில்தார்கள் செந்தில்குமார், வெங்கடேசன், மண்டல துணை தாசில்தார்கள் ஆறுமுகம், புருேஷாத்தமன், வருவாய் ஆய்வாளர்கள் தெய்வீகன், வினோத், நாகராஜன், மாரியம்மாள் மற்றும் அனைத்து கிராம வி.ஏ.ஓ.,க்கள் பயிற்சியில் பங்கேற்றனர்.