Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ பெண்ணை மிரட்டிய  வாலிபர் கைது

பெண்ணை மிரட்டிய  வாலிபர் கைது

பெண்ணை மிரட்டிய  வாலிபர் கைது

பெண்ணை மிரட்டிய  வாலிபர் கைது

ADDED : ஜூன் 12, 2024 01:52 AM


Google News
விழுப்புரம் : ஒலக்கூர் அருகே அண்டபட்டு கிராமத்தை சேர்ந்தவர் மணி மனைவி முனியம்மாள்,24; இவருக்கும், பெருமாள் மகன் மணிகண்டன்,39; என்பவருக்கும் அருகருகே வீடு உள்ளது. கடந்த 2 மாதங்களுக்க முன் முனியம்மாள் தனது வீட்டருகே காய வைத்திருந்த மணிலா கொடியை, மணிகண்டன் வீட்டு ஆடு ஒன்று மேய்ந்துள்ளது.

இதை முனியம்மாள், அந்த பகுதி முழுவதும் கூறியதால், இவருக்கும், மணிகண்டனுக்கும் முன்விரோதம் இருந்தது. கடந்த 7 ம் தேதி, முனியம்மாள் வீட்டின் பின்னால் இருந்த பாதாம் மரத்திலிருந்து சறுகுகள் மணிகண்டன் வீட்டின் மீது விழுந்துள்ளது.

இதனால், மணிகண்டன், இவரது மனைவி ராஜேஸ்வரி,39; ஆகியோர் முனியம்மாளை, ஜாதி பெயரை கூறி திட்டி, மிரட்டல் விடுத்துள்ளனர்.

ஒலக்கூர் போலீசார் மணிகண்டன், ராஜேஸ்வரி மீது வழக்குப் பதிந்து மணிகண்டனை கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us