/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ அடுத்த மாத இறுதிக்குள் புதிய பஸ் நிலையம் திறக்க ஏற்பாடு திண்டிவனம் நகராட்சி கமிஷனர் தகவல் அடுத்த மாத இறுதிக்குள் புதிய பஸ் நிலையம் திறக்க ஏற்பாடு திண்டிவனம் நகராட்சி கமிஷனர் தகவல்
அடுத்த மாத இறுதிக்குள் புதிய பஸ் நிலையம் திறக்க ஏற்பாடு திண்டிவனம் நகராட்சி கமிஷனர் தகவல்
அடுத்த மாத இறுதிக்குள் புதிய பஸ் நிலையம் திறக்க ஏற்பாடு திண்டிவனம் நகராட்சி கமிஷனர் தகவல்
அடுத்த மாத இறுதிக்குள் புதிய பஸ் நிலையம் திறக்க ஏற்பாடு திண்டிவனம் நகராட்சி கமிஷனர் தகவல்
ADDED : ஜூலை 21, 2024 07:49 AM

திண்டிவனம்: திண்டிவனத்தில் 20 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டு வரும் நகராட்சி புதிய பஸ் நிலையம் அடுத்த மாத இறுதிக்குள் திறப்பதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
திண்டிவனம் - சென்னை சாலையில் பி.எஸ்.என்.எல்., டவர் அருகே 6 ஏக்கர் பரப்பளவில், நகராட்சி சார்பில் 20 கோடி ரூபாய் செலவில் புதிய பஸ் நிலையம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
கட்டுமானப் பணிகளை நேற்று காலை, நகர மன்ற தலைவர் நிர்மலா ரவிச்சந்திரன், நகராட்சி கமிஷனர் (பொறுப்பு) ரமேஷ் ஆகியோர் ஆய்வு செய்து, கட்டுமானப் பணியை மேற்கொண்ட ஒப்பந்ததாரரிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுருத்தினர்.
இதுகுறித்து கமிஷனர் கூறுகையில், 'புதிய பஸ் நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 75 சதவீதம் முடிந்துள்ளது. மீதமுள்ள பணிகளை ஆகஸ்ட் மாத இறுதிக்குள் முடித்து திறக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றார்.
ஆய்வின் போது, நகராட்சி பொறியாளர் பவுல்செல்வம், மேலாளர் நெடுமாறன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.