/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஆற்று வாய்க்காலில் கவிழ்ந்த கார் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார் ஆற்று வாய்க்காலில் கவிழ்ந்த கார் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்
ஆற்று வாய்க்காலில் கவிழ்ந்த கார் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்
ஆற்று வாய்க்காலில் கவிழ்ந்த கார் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்
ஆற்று வாய்க்காலில் கவிழ்ந்த கார் டிரைவர் காயத்துடன் உயிர் தப்பினார்
ADDED : ஜூன் 11, 2024 06:39 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே பம்பை ஆற்று வாய்க்காலில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கும்பகோணத்தை சேர்ந்தவர் கலைவாணன், 36; இவர், தனது காரில் கும்பகோணத்திலிருந்து, சென்னைக்கு புறப்பட்டு சென்றார். இந்த கார், நேற்று காலை 5:00 மணிக்கு, விழுப்புரம் அருகே மாதிரிமங்கலம் பம்பை ஆற்று வாய்க்கால் பாலம் அருகே வந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், பாலத்தின் தடுப்புச்சுவரை உடைத்துக்கொண்டு 15 அடி ஆழத்தில் இருந்த பம்பை ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
ஆற்றில் தண்ணீர் இல்லாததால் மணலில் மோதி, காரின் பின்பகுதி சேதமடைந்தது.
காரை ஓட்டிச்சென்ற கலைவாணன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
விபத்து குறித்த தகவலின் பேரில் விழுப்புரம் தாலுகா போலீசார் விரைந்து சென்று, கலைவாணனை மீட்டு, சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்துக்குள்ளான காரை ஆற்றில் இருந்து மீட்டு, தாலுகா போலீசார் விசாரணை நடத்தினர்.