Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது கூடாரங்களை காலி செய்த கட்சியினர்

இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது கூடாரங்களை காலி செய்த கட்சியினர்

இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது கூடாரங்களை காலி செய்த கட்சியினர்

இடைத்தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது கூடாரங்களை காலி செய்த கட்சியினர்

ADDED : ஜூலை 09, 2024 04:11 AM


Google News
இடைத்தேர்தல் பிரசாரத்திற்காக விக்கிரவாண்டியில் தங்கியிருந்த வெளியூர் அமைச்சர்கள், கட்சியினர் காலி செய்ததால், சாலை சந்திப்புகள், ஓட்டல்கள் வெறிச்சோடியது.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்காக, ஆளும் தி.மு.க., தரப்பில், தொகுதி பொறுப்பு அமைச்சர்கள் பொன்முடி, வேலு, நேரு, பன்னீர்செல்வம், கணேசன், காந்தி, மகேஷ், ஜெகத்ரட்சகன் எம்.பி., உள்ளிட்டோரும், பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த எம்.எல்.ஏ.,க்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் பலரும் வந்து, தொகுதியில் தங்கியிருந்தனர்.

இவர்களுக்கு, ஒன்றியங்கள் வாரியாக 5 கிராமங்கள் வரை பிரித்து வழங்கப்பட்டு பணியாற்றி வந்தனர்.

இதனால், விழுப்புரம், விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம் பகுதி ஓட்டல்களிலும், விக்கிரவாண்டி, காணை, திருவாமாத்துார், கெடார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வீடுகளிலும், திருமண மண்டபங்களிலும், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்கியிருந்தனர்.

கடந்த மாதம் சட்டசபை முடிந்த பிறகு வந்து தங்கியிருந்தவர்கள், தினமும் பிரசாரங்களில் ஈடுபட்டு வீடு, வீடாகச் சென்று, சால்வை அணிவித்து ஆதரவும் திரட்டி ஓட்டு கேட்டு வந்தனர்.

இதே போல், பா.ம.க., தரப்பிலும் மணி தலைமையில் எம்.எல்.ஏ.,க்கள், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், கடலுார், தர்மபுரி, சேலம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகிகள், தங்கியிருந்து பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

நேற்று மாலை 6:00 மணியுடன் பிரசாரம் நிறைவடைந்தது. அமைச்சர் உதயநிதி தலைமையில் தி.மு.க., தரப்பு விக்கிரவாண்டியிலும், பா.ம.க., தலைவர் அன்புமணி தலைமையில் பா.ம.க., தரப்பு கெடாரிலும் இறுதிக்கட்ட பிரசாரத்தை நிறைவு செய்தனர்.

இதனையடுத்து, பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த கட்சியினர் ஊர்களுக்கு கிளம்பினர்.

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்து, விழுப்புரம், காணை, விக்கிரவாண்டி பகுதிகளில் முகாமிட்டிருந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், கட்சி நிர்வாகிகள் நேற்று மதியம் 2:00 மணி முதலே ஊர்களுக்கு புறப்பட்டனர்.

பலர், விழுப்புரம் வழியாக கார்களில் சென்றதால், விழுப்புரம் நகரில் பல இடங்களில், கட்சி சின்னங்களுடன் கூடிய வாகனங்கள் அணிவகுத்தபடி சென்றன.

பிரசாரம் முடிந்து, வெளியூர் அமைச்சர்கள், நிர்வாகிகள் கட்சியினர் புறப்பட்டதால், காணை, விக்கிரவாண்டி, முண்டியம்பாக்கம், விழுப்புரம், கெடார் உள்ளிட்ட பகுதிகளில், கடந்த 10 நாள்களாக முக்கிய சந்திப்புகள், மண்டபங்கள், ஓட்டல்களில் இருந்த கூட்டமும், பரபரப்பும் முடிவுக்கு வந்து வெறிச்சோடியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us