/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேர் உடல்கள் ஒப்படைப்பு கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேர் உடல்கள் ஒப்படைப்பு
கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேர் உடல்கள் ஒப்படைப்பு
கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேர் உடல்கள் ஒப்படைப்பு
கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேர் உடல்கள் ஒப்படைப்பு
ADDED : ஜூன் 20, 2024 08:32 PM
விக்கிரவாண்டி : கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து இறந்த 4 பேரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரத்தில் நேற்று முன்தினம் கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களான அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ், 45; பிரவீன் குமார், 29; சேகர், 57; மணிகண்டன், 35; ஆகிய 4 பேரின் உடல்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் பிரதே பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தது.
நேற்று முன்தினம் இரவு பலத்த போலீஸ் பாதுகாப்புடன், வீடியோ பதிவுடன் டாக்டர்கள் மதுவர்த்தனா, செல்வகுமார் ஆகியோர் பிரேத பரிசோதனை செய்தனர்.
பிரேத பரிசோதனை முடிந்தபின், சின்னசேலம் கமலக்கண்ணன் முன்னிலையில் உறவினர்களிடம், 11:40 மணிக்கு உடல்கள் ஒப்படைக்கப்பட்டது.