ADDED : ஜூன் 16, 2024 06:30 AM
மயிலம்: மயிலம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் வயிற்று வலியால் வாலிபர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி மாநிலம், மண்ணடிபட்டு அடுத்த செல்லிப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் மணிபாலன் மகன் பால்ராஜ், 26; இவர் மயிலம் அடுத்த பெரும்பாக்கம் கிராமத்தில் உள்ள அவரது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார்.
நீண்ட நாட்களாக வயிற்று வலியால் அவதி அடைந்து வந்தார். நேற்று முன்தினம் அதிகாலை மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதனால், மனமுடைந்த அவர், துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.புகாரின் பேரில் மயிலம் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.