ADDED : ஜூன் 11, 2024 06:41 AM
விழுப்புரம்: ஒலக்கூர் அருகே கஞ்சா விற்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ஒலக்கூர் சப்-இன்ஸ்பெக்டர் மகாலிங்கம் தலைமையிலான போலீசார், நேற்று சாரம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு, சந்தேகத்திற்கு இடமாக நின்றிருந்த வாலிபரை பிடித்து போலீசார் சோதனை செய்தனர். அவர், பாக்கெட்டில் 50 கிராம் கஞ்சா பொட்டலம் விற்பதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், அவர் ஒலக்கூரை சேர்ந்த செல்வராஜ் மகன் பிரேம்ராஜ், 23; என்பது தெரியவந்தது. பின், போலீசார் அவர் மீது வழக்குப் பதிந்து கைது செய்ததோடு, கஞ்சா பொட்டலத்தையும் பறிமுதல் செய்தனர்.