ADDED : ஜூன் 20, 2024 03:42 AM
விழுப்புரம் : விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வளவனுார் சப் இன்ஸ்பெக்டர் தங்கபாண்டியன் தலைமையிலான போலீசார், நேற்று முன்தினம் கோலியனூர் பகுதியில் ரோந்து சென்றனர்.
அப்போது, கோலியனுார் கால்நடை மருத்துவமனை அருகே சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்த பனங்குப்பம் தோப்பு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் சூர்யா, 23; என்பவரை பிடித்து சோதனை செய்தனர். அவரிடம் 100 கிராம் கஞ்சா பொட்டலம் இருந்தது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.