ADDED : ஜூலை 07, 2024 04:10 AM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே கஞ்சா வைத்திருந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம் தாலுகா கோனூர் கிராமத்தில், காணை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, அதே பகுதியை சேர்ந்த ஏழுமலை மகன் மதியழகன், 26; அங்குள்ள சுடுகாடு பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் நின்றிருந்தார்.
அவரை சோதனை செய்ததில், 50 கிராம் கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது. உடனே பறிமுதல் செய்த காணை போலீசார் அவரை கைது செய்தனர்.