/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ ஜாதி அரசியல் செய்யும் தி.மு.க.,விற்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்: அன்புமணி ஜாதி அரசியல் செய்யும் தி.மு.க.,விற்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்: அன்புமணி
ஜாதி அரசியல் செய்யும் தி.மு.க.,விற்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்: அன்புமணி
ஜாதி அரசியல் செய்யும் தி.மு.க.,விற்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்: அன்புமணி
ஜாதி அரசியல் செய்யும் தி.மு.க.,விற்கு தேர்தலில் பாடம் புகட்டுங்கள்: அன்புமணி
ADDED : ஜூலை 08, 2024 04:59 AM

விக்கிரவாண்டி: 'ஜாதி அரசியல் செய்யும் தி.மு.க.,விற்கு பாடம் புகட்ட வேண்டும்' என பா.ம.க., மாநிலத் தலைவர் அன்புமணி பேசினார்.
விக்கிரவாண்டி தொகுதி பா.ம.க., வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து வடக்குச்சிபாளையம் பொன்னங்குப்பம், வி.சாத்தனுார், கொட்டியாம்பூண்டி, அசோகபுரி, லட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் அவர் பேசியதாவது:
விழுப்புரம் மாவட்டம் அதிக குடிசைகள் உள்ள மாவட்டம். தேர்தல் நேரத்தில் மட்டும் உங்களிடம் வந்து ஓட்டு மட்டும் கேட்டு வாங்கிச் செல்வார்கள். அதன் பிறகு உங்களைப் பற்றி சிந்திக்க மாட்டார்கள்.
தாழ்த்தப்பட்ட சமுதாயமும், வன்னியர் சமுதாயமும் ஒரே நிலையில் தான் உள்ளனர்.
தி.மு.க.,வின் சூழ்ச்சியால் நம்மை பிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இரு சமுதாயமும் சேர்ந்து ஆட்சி அமைக்க வேண்டும். 77 ஆண்டுகளாகியும் நாம் இன்னும் தி.மு.க.,வின் சூழ்ச்சிக்கும், மதுவிற்கும் அடிமையாக உள்ளோம்.
நம்மை ஓட்டு வங்கியாகத்தான் பார்க்கிறார்கள் மனிதனாகவே பார்ப்பதில்லை. தமிழகத்தில் கொலை, கொள்ளை, கஞ்சா, சாராயம் தான் அதிகமாக உள்ளது. சமீப காலமாக கெட்டுள்ள சட்டம் ஒழுங்கிற்கு முதல்வர் ஸ்டாலின் முழு பொறுப்பேற்க வேண்டும்.
இந்த தேர்தல் மிக முக்கியமான தேர்தல் ஆகும். பிள்ளைகளின் எதிர்காலத்திற்கு முக்கியமான தேர்தல். ஓட்டு என்கிற ஆயுதம் உங்களிடம் உள்ளது. உங்கள் ஓட்டுகளை பணத்துக்காக விற்காதீர்கள்.
இவ்வாறு அன்புமணி பேசினார்.
தொகுதி பொறுப்பாளர்கள் வழக்கறிஞர் பாலு, சிவக்குமார் எம்.எல்.ஏ., மேட்டூர் எம்.எல்.ஏ., சதாசிவம், மாநில செயற்குழு மோகன், அமைப்பாளர்கள் பழனிவேல் மணிமாறன், செல்வகுமார், சுபாஷ் சந்திர போஸ், ஒன்றிய செயலாளர் கோபாலகிருஷ்ணன், சக்திவேல், சுதாகர் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.