/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/ சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து
சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து
சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து
சவுக்கு தோப்பில் திடீர் தீ விபத்து
ADDED : ஜூன் 10, 2024 01:26 AM
திண்டிவனம் : திண்டிவனம் அருகே மின் கம்பி உராய்வால் 4 ஏக்கர் பரப்பளவிலான சவுக்கு மரங்கள் எரிந்து சேதமானது.
திண்டிவனம் அடுத்த பனையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முரளி, 41; இவர், அதே பகுதியில் ஒன்றரை ஏக்கர் பரப்பளவில் சவுக்கு நட்டிருந்தார்.
இவருடைய நிலத்திற்கு பக்கத்தில், அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜமாணிக்கம், 50; என்பவர் 3 ஏக்கர் பரப்பளவில் சவுக்கு நட்டிருந்தார்.
நேற்று பிற்பகல் 2:30 மணியளவில், நிலத்திற்கு மேற்பகுதியில் சென்ற மின் கம்பிகளில் உராய்வு ஏற்பட்டு சவுக்கு மரங்களில் தீ பற்றியது.
தகவலறிந்து வந்த திண்டிவனம் தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைத்தனர்.
தீ விபத்து குறித்து ஒலக்கூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.